கடந்த (17,18,19.06.2019)மன்னாரில் மன்/அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடந்த மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றியிருந்தது.
மாகாண மட்டம்வரை செல்வதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலையின் #முதல்வர் திரு.ந.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்
அணியின் #பொறுப்பாசிரியராக இருந்த திரு. சௌ. விஜயதாஸ் ஆசிரியருக்கும் எமது சார்பாகவும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் அணி #வீரர்களுக்கும் அணிக்குப் #பயிற்சியளித்தடற்படை அதிகாரிகள் திரு.சுகுமார் திரு.துஜித்த மற்றும் ஆசிரியர் திரு.N. பிரகாஸ் அவர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது அணி யா/நாவற்குழி மகா வித்தியாலய அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை மாகாண மட்டத்தில் பதிவு செய்தது.

அடுத்ததாக கிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணியை எதிர்கொண்டு 1:5என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

#தோல்வி #என்பது #வெற்றியின் #முதற்ப்படியாகவே #உள்ளது.

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக #138வருடங்களுக்குப்பின்னர் மாகாண மட்டத்தில் உதைபந்தாட்டத்திற்கு எமது பாடசாலை தெரிவாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் எமது ETC சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் #etcsport.net

 

Leave a Reply