ETC Build New Playground at Pungudutivu

 

ETC அமைப்பினால் 2019 ம் ஆண்டு நிறுவப்படவுள்ள விளையாட்டு மைதானம்

கல்வித்திறன்களை மட்டுமல்லாது விளையாட்டுத் திறமைகளையும் வளர்த்துக் கொள்வற்காக எமது ETC அமைப்பானது 2019 ம் ஆண்டு விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பற்கான யுக்திகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கு உரிய முறையில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளவும், அவ்விடத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களிற்கு போதிய அளவு வசதியுடைய மைதானத்தை அமைத்துக் கொடுக்கவும் உள்ளது.

தீவகங்களை பொறுத்த வரையில் விளையாட்டுக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இவ்வகையில் தீவகத்தில் உள்ள திறமைமிக்க விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காகவே இவ்வகையான பணிகள் மேற்கொண்டு வரப்படுகிறது. நமது நாட்டில் தீவகங்களுக்கு இடையில் போதிய அளவு மைதான வசதிகள் இல்லாதமையே இதற்கு முக்கிய காரணமாகும். தீவகங்களில் நடத்தப்படும் போட்டிகளில் சிறந்த வீரர்களை எமது ETC அமைப்பினால் உருவாக்க முடியும். இவ் மைதானமானது விளையாட்டு ஆர்வம் உள்ள அனைவராலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply