Soccer Games in 2019 at Pungudutivu

எமது ETC அமைப்பானது தீவகங்களில் உள்ள மாணவர்களின் நலன் கருதியும் திறமையுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் பலதரப்பட்ட சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சேவைகளின் அடிப்படையிலாக இவ்வருடம் 2019ம் ஆண்டில் கால்பந்தாட்ட போட்டிகளை தீவகங்களுக்கிடையிலான விளையாட்டு வீரர்களுக்காக ஒழுங்கு செய்துள்ளது. இந்த கால்பந்தாட்டப் போட்டியில் தீவகங்களை சூழ்ந்து வாழும் பலதரப்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவ்வீரர்கள் தம்முடைய அனிகளுடன் சேர்ந்து போட்டிக்கான ஆயத்தப்பயிட்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தீவகங்களில் உள்ள பலதரப்பட்ட விளையாட்டு கழகங்களும் பங்குபற்ற ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply